
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (13/09/2022) காலை 10.00 மணிக்கு அனைத்துத்துறைச் செயலாளர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
துறைவாரியான திட்டப் பணிகள், நடவடிக்கைகள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர், பருவமழை தொடங்கும் முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கவுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பல்வேறு துறை சார்ந்த அரசுத்துறையின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.