Chief Minister M. K. Stalin's condemnation of the incident of throwing shoes!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (14/08/2022) கட்சியின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசி, தேசிய கொடியை அவமதித்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தமிழகத்தில் இதுபோன்ற உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது.

Advertisment

அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என அரசும், தி.மு.க.வும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. அடாவடி செயலில் ஈடுபட்டவர்கள் தங்கள் தேசப் பக்தி போலித்தனமானது என வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டின் மூவர்ண கொடியைப் போற்றுவோம். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம்"என்று குறிப்பிட்டுள்ளார்.