Chief Minister M. K. Stalin will participate in the meeting led by the Prime Minister!

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருக்கிறார்.

அடுத்தாண்டு ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான, முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் வரும் டிசம்பர் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக வரும் டிசம்பர் 4- ஆம் தேதி அன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் 5- ஆம் தேதி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த பயணத்தின் போது, தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழகம் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் முன் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றன.

Advertisment

ஏற்கனவே, பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.