Advertisment

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையைத் திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

Chief Minister M K Stalin inaugurated the statue of poet Rabindranath Tagore

செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் முழு உருவச் சிலையைத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisment

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ரவீந்திரநாத் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, சேகர் பாபு, சாமிநாதன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Chennai statue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe