Chief Minister M. K. Stalin fed food to students!

Advertisment

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114- வது பிறந்தநாளையொட்டி, இன்று (15/09/2022) காலை 07.00 மணியளவில்மதுரை மாவட்டம், நெல்பேட்டையில் உள்ள அவரது அலங்கரிக்கப்பட்ட திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஏ.கே.மூர்த்தி, எ.வ.வேலு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் அண்ணாவின் படத்திற்கு மரியாதைசெலுத்தினர்.

பின்னர், ஆதிமூலம் மாநகராட்சி பள்ளிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, மாணவர்களுடன் அமர்ந்து உணவைசாப்பிட்ட முதலமைச்சர், மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டார்.

முன்னதாக, மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த காலை உணவை முதலமைச்சர் சுவைத்துப் பார்த்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் பிற மாவட்டங்களில் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.