கோயில்களை செம்மைப்படுத்த முதல்வர் தலைமையில் குழு... தமிழக அரசு அரசாணை!

Chief Minister-led committee to renovate temples ... Government of Tamil Nadu!

தமிழகத்தில் கோயில்களை செம்மைப்படுத்த தமிழக முதல்வர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில்களில் பராமரிப்பை செழுமைப்படுத்த, பக்தர்களின் வசதியை மேம்படுத்த தமிழக முதல்வர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, இந்த உயர்நிலை ஆலோசனைக் குழுவிற்கான உறுப்பினர்களை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

tn temple

இந்த ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இக்குழுவில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கல்வியாளர் ராமசுப்பிரமணியன், சுகிசிவம் உட்பட 13 பேர் அலுவல் சாரா உறுப்பினர்களாகவும், சத்தியவேல் முருகனார், தேச மங்கையர்க்கரசி, கருமுத்து தி.கண்ணன் உள்ளிட்டோரும் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

temple TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe