Chief Minister instructions to bus drivers

Advertisment

நாடு முழுவதும், நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு தினங்களாக தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கிறார்கள். இதன் காரணமாக வேறு மாவட்டங்களில் இருந்து வேலைக்காக சென்னை வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு சார்பாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 09ம் தேதி 1,260 பேருந்துகளில் 50,400 பயணிகளும், 10ம் தேதி 1,680 பேருந்துகளில் 67,200 பயணிகள் என இரு நாட்களில் 1,17,600 பயணிகள் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு ஆம்னி பேருந்துகளில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், 10ம் தேதி இரவு திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் அரசு விரைவுப் பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், பேருந்து ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பேருந்து ஓட்டுநர்களுக்கு, “ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் பேருந்துகளை இயக்க வேண்டும். கவனச் சிதறல்கள் ஏதுமின்றி பேருந்துகளை இயக்கி, பயணிகளை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.