Advertisment

22 ஆண்டுகளுக்கு பிறகு புழல் ஏரியில் தமிழ்நாடு முதல்வர் ஆய்வு!

hg

பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்ய தமிழ்நாடுஅரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களாக மழை தொடர்பான முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் செய்துவருகிறார்கள். இந்நிலையில், இன்று (20.10.2021) காலை சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். மதகுகளின் உறுதி தன்மை, நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

Advertisment

கடந்த 1999ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது புழல் ஏரியை ஆய்வுசெய்தார். அதன் பிறகு 22 ஆண்டுகள் கடந்து தற்போது மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

puzhal lake mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe