Advertisment

மயிலாடுதுறையில் முதல்வர் ஆய்வு; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Chief Minister inspects Mayiladuthurai; Holidays for schools and colleges

வளிமண்டலகீழடுக்கு சுழற்சி காரணமாகத்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Advertisment

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழையால் நீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் அரசு கட்டிடங்கள் இருக்கும் இடங்களில் கூட நீர் தேங்கியுள்ளது.

Advertisment

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மழை பெய்யும் பொழுது மழைநீர் தேங்குவது இயல்பு. மழை நின்றவுடன் தண்ணீர் வடிந்துவிடும். அடுத்தடுத்துகனமழை வரும் எனச் சொல்கிறார்கள். அதை எதிர்பார்த்துத்தான் பணிகளைச் செய்து வருகிறோம். எந்த ஆபத்தும் நேராது. அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இன்று இரவு சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் போன்ற இடங்களில்ஆய்வு செய்ய இருக்கிறேன்” எனக் கூறி இருந்தார்.

நீர் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டிய ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

monsoon
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe