கரோனா தடுப்பு பணிகள் குறித்து பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கோவை கொடீசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 250 கூடுதல் கரோனா படுக்கை வசதிகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டார். குறிப்பாக கோவையில் கரோனா ஒருநாள் தொற்று பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோவையில் ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 800 படுக்கை வசதிகளை கொண்ட கரோனா மையத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.