ரக

Advertisment

செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் முதல்வர் இன்று நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.

கடந்து 25ம் தேதி வீசிய நிவர் புயல் தமிழகத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பல இடங்களில் கடல் நீர் கிராமங்களில் புகுந்துபெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. சென்னை உள்ளிட்ட இடங்களில் குறிப்பாக புறநகர் பகுதிகளில் பலத்த பழை பெய்தது. தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 34 செமீ மழை பொழிந்தது. இதனால் அருகில் உள்ள பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியது. புயல் வீசி நான்கு நாட்கள் ஆன நிலையிலும் அப்பகுதிகளில் மழை நீர் இன்னும் வடியவில்லை. இந்நிலையில் இந்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் ஆய்வு செய்ய உள்ளார்.