Chief Minister inspection at the Institute of Classical Tamil Studies!

மத்திய அரசின் சார்பில், சென்னை பெரும்பாக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் ரூ. 24.65 கோடி செலவில், 70,000 சதுர அடியில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த 12ஆம் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக கலந்து கொண்டார்.

Advertisment

இந்நிலையில், இன்று காலை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

ஐங்குறுநூறு பாலை, களப்பிரர் வரலாறு, தொல்காப்பிய ஆய்வு உள்ளிட்ட நூல்களை முதல்வர் வெளியிட்டார். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், ஓலைச்சுவடிகள் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் உள்ளன.