Skip to main content

மஞ்சப்பை இயக்கத்தை துவக்கிவைத்த முதல்வர்! (படங்கள்)

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

பிளாஸ்டிக் பைகளுக்கு எதிரான மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23/12/2021) தொடங்கிவைத்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மஞ்சப்பை இயக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கிவைத்துள்ளார்.

 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏற்கனவே 14 பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

 

 

சார்ந்த செய்திகள்