Published on 19/11/2021 | Edited on 19/11/2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19/11/2021) கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் 53- ஆவது மண்டலக் கருத்தரங்கைக் காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் தலைவர் நிஹார் ஜம்புசரியா, முன்னாள் தலைவர் ஜி.ராமசாமி, தென்மண்டல கவுன்சில் தலைவர் கே.ஜலபதி கோயம்புத்தூரின் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் தலைவர் பிரபு, செயலாளர் டி.நாககுமார் மற்றும் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.