சென்னை, ஆயிரம் விளக்கு, மாடல் பள்ளி சாலையில்இன்று (14.05.2022) காலை 09.15 மணியளவில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், புதிய பேருந்து சேவையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.எல்.ஏ எழிலன், சென்னை மேயர் ஆர். பிரியா, சென்னை ஆணையர் ககன் தீப் சிங் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சிறப்பு பள்ளியில் புது கட்டடத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர்! (படங்கள்)
Advertisment