ஏ.வி.எம்.ஸ்டுடியோ உபயோகத்தில் இருந்த பழைய மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிய திரைப்பட தயாரிப்பு மிகப் பழமையான பாரம்பரியமிக்க, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் கொண்ட ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஏ.வி.எம். நிறுவன உரிமையாளர்கள் சரவணன் மற்றும் எம்.எஸ். குகன், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.