சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று (03/08/2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னைமயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகையினை வெளியிட்டார். அப்பதாகையில் குருக்களின் பெயர்களும், அலைபேசி எண்களும் இடம்பெற்றிருக்கும். இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடுஇந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் இ.ஆ.ப. ஆகியோர் உடனிருந்தனர்.
"அன்னைத் தமிழில் அர்ச்சனை” செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகையினை வெளியிட்டார் முதலமைச்சர்!
Advertisment