Advertisment

"தொழில்துறையை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் முதலமைச்சர்"- பட்டாசு  வியாபாரிகள் சங்க மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு!

publive-image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மாவட்ட பட்டாசு வியாபாரிகள் சங்க மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

Advertisment

மாநாட்டில் பேசிய அமைச்சர் அர.சக்கரபாணி, "தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் தமிழகம் தொழில்துறையில் 14- வது இடத்தில் இருந்ததை தற்போது மூன்றாவது இடத்திற்கு கொண்டுச் சென்றுள்ளார். தமிழக அரசு செய்து வரும் திட்டங்களால் அனைத்து துறைகளும் முதன்மை இடத்திற்கு வரும் வகையில், முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். பட்டாசு தொழிலாளர்களின் நீண்டநாள் வாழ்வாதார பிரச்சனையை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கடந்த கால தி.மு.க. ஆட்சியில் தீர்த்து வைத்தார்.

Advertisment

பட்டாசு வியாபாரிகள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான வகையில் பட்டாசு வியாபாரத்தை செய்ய வேண்டும். உலகில் அனைத்து நிகழ்வுகளுக்கும் பட்டாசின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது. பட்டாசு தொழிலாளர்களின் அத்தியாவசிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" என்று கூறினார்.

minister Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe