/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4141.jpg)
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் (2025-26 ஆண்டில்) 276 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். அதோடு தூய்மை பணிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பீட்டிலான 51 மின்கல வாகனங்கள் மற்றும் 284 துாய்மைப் பணியாளர்களுக்கு ரூ.45.44 லட்சம் மதிப்பீட்டிலான சீருடை களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல் படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம் பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில் 2.50 லட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 2024-ஆம் ஆண்டு சுமார் 360 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதில் சுமார் 224 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கு 276 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கிராம ஊராட்சிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 51 மின்கல வாகனங்கள் மற்றும் 284 துாய்மைப் பணியாளர்களுக்கு ரூ.45.44 லட்சம் மதிப்பீட்டிலான சீருடைகள் வழங்கப்படுகிறது. பழுதடைந்த வீடுகள் சீரமைக்கும் திட்டத்தில் 383 பயனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட் டதில் 344 பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல் வே று திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 லட்சம் மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் சுமார் 18.00 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நத்தத்தில் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது' என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)