Published on 24/11/2021 | Edited on 24/11/2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24/11/2021) தலைமைச் செயலகத்தில், காவல் பணியின்போது வீர மரணமடைந்த திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) பூமிநாதனின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி கவிதாவிடம் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு இ.கா.ப., பூமிநாதனின் மகன் குகன்பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.