Advertisment

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ஊதியத்தை வழங்கிய முதல்வர்!

The Chief Minister gave one month's salary as a relief fund for cyclone fengal

Advertisment

ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாகத் திருவண்ணாமலையில் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லி குறைகளை கேட்டறிந்தனர்.

புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் ரூபாய் வழங்கிடவும்; அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் திருவண்ணாமலை நிலச்சரிவால் உயிரிழந்த உறவினர்களுக்கு தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்து புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது கட்சி தலைமை அலுவலகத்தில் நிவாரண உதவி வழங்கினார்.

இந்த நிலையில், நிவாரண உதவி வழங்க தனது ஒரு மாத ஊதியத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் தமிழக முதல்வர் தனது ஒரு மாத ஊதியத்தை காசோலையாக வழங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe