Advertisment

சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர்!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை 3வது முறையாக ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு விருதுகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

Advertisment

முன்னதாக இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம், பாப்பனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் லிதர்சன் என்ற மாணவர் கடந்த 3 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். நான் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பாப்பனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். சுதந்திர தின விழாவில் கொடி ஏத்துறதை பார்க்க எனக்கு ஆசையா இருக்கு. நான் பார்க்கணும் போல இருக்கு. நாங்களும் எங்க பள்ளியில் கொடி ஏத்துவோம் சுதந்திர தின வாழ்த்துகள் ஐயா” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

Advertisment

இந்நிலையில் மாணவனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவர் லிதர்சனை சென்னையில்இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில்சிறப்பு விருந்தினராக நேரில் அழைக்கப்பட்டு அவரது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு கௌரவிக்கப்பட்டார்.

independence day. letter mk stalin Ramanathapuram school student
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe