Advertisment

முதல்வர் கொடியேற்றும் விழாவில் குண்டுவெடிக்கும் என மிரட்டல் விட்ட நபர் கைது!!

சென்னை கோட்டையில் குண்டு வெடிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்ற முடியாது என்று கோவையில் இருந்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்ததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விட்டவரைபோலீசார் கைதுசெய்துள்ளனர்.

Advertisment

bomb

Advertisment

சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி தேசியக்கொடி ஏற்றினால் வெடிகுண்டு வெடிக்கும் என கோவையில் இருந்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்வந்திருந்தது. அந்த தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் மிரட்டல்விட்ட நபர் இருக்கும் இடத்தைகண்டறிந்தனர்.கோவை இதய தெய்வம் மாளிகை அருகே அடுக்குமாடி குடியிருப்பு பணி நடைபெறும் இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறமகாராஜா என்ற மாரிஎன்பவர்தான் அந்த கொலைமிரட்டலை விடுத்தவர் எனகோவையில் DR பாலசுந்தரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்இன்று காலையில் பணியில் இருந்த போது ரேஸ் கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.

ஒசூர் ரோட்டில் இவர் பணி புரியும் செக்யூரிட்டி அலுவலகம் உள்ளது. குருக்கள் பட்டி சங்கரன் கோவில் சேர்ந்த அந்த நபரின் மீது IPC 294 b 506 507 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

arrest bomb threat edapadi police
இதையும் படியுங்கள்
Subscribe