தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுமுடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரியாணி, புராட்டோ சாப்பிட்டுவிட்டு திமுகவினர் குண்டு குண்டாக இருப்பார்கள். ஓட்டல்களில் பிரியாணி, புரோட்டாசாப்பிட்டுவிட்டு காசு தராமல் திமுகவினர் சென்றுவிடுவார்கள். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருப்பதால்திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர்'' என்றார்.