Advertisment

"கமலுக்கு என்ன தெரியும்... அதில் எல்லாம் அவர் ஜீரோ!" - கமலை விமர்சித்த எடப்பாடி!

The chief minister edappadi palanisamy questioned Kamal

'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில், நாளை முதல் அ.தி.மு.க. பரப்புரையைத் தொடங்க இருக்கிறது. நாளை (29.12.2020) முதல் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.'தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் திமுகவும்'தமிழகத்தைச் சீரமைப்போம்' என்ற பெயரில்மக்கள் நீதி மய்யமும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில்,அதிமுக 'வெற்றி நடைபோடும்தமிழகம்' என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, "தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி அமைச்சரவையை ஏற்க இயலாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. தமிழக மக்களும், கூட்டணி அமைச்சரவையை ஏற்க மாட்டார்கள்" எனக் கூறினார். மேலும், கமல் குறித்த கேள்விக்கு, "தமிழகத்தைப் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? அவர் சினிமாவில் பெரியவராக இருக்கலாம், ஆனால், அரசியலில் ஜீரோ" இவ்வாறு பேசினார்.

Advertisment

kamalhaasan edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe