Advertisment

''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

Chief Minister Edappadi Palanichamy press meet

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கை பணிமற்றும் வளர்ச்சி பணிகள் குறித்துமுதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுமேற்கொண்டுள்ளார்.இதன் காரணமாக திண்டுக்கல்லின்பல்வேறு இடங்களில் அவர் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். அதனையடுத்து தற்போது செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Advertisment

இ-பாஸ் பெறுவதற்கு ஒரே குழு மட்டும் இருந்த நிலையில்,தற்போது எளிமையாக இ-பாஸ் பெறுவதற்காக இரு குழுக்கள் அனைத்து மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இ-பாஸ் பெறுவது எளிமையாகப்படும்என தெரிவித்தார்.

Advertisment

நேற்று எஸ்.வி.சேகர் அ.தி.மு.க குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்த கேள்வி முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,

எஸ்.வி சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். எங்களுக்கு இந்திதெரியும்எனஎப்படி அவருக்குதெரியும். அவரையெல்லாம் ஒரு பெரிய கட்சி தலைவராகவே நான் கருதவில்லை. அவர் முதலில்எந்த கட்சி என கேள்வி எழுப்பியமுதல்வர், அதேபோல்பாஜகவை விட்டுநாயினார் நாகேந்திரன் அ.தி.மு.கவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் எனவும்,இருமொழிக் கொள்கை என்பதே தமிழகத்தில் தொடரும்.அதில் எந்த மாற்றமும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி செய்துள்ளார்.

edappadi pazhaniswamy SV Shekar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe