Advertisment

பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் ஆலோசனை செய்த முதலமைச்சர்!

Chief Minister consulted with the Economic Advisory Council!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (25/10/2021) பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

Advertisment

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "கரோனாவுக்குப் பிந்தைய நிலைக்கேற்ப திட்டமிட வேண்டியுள்ளது. விளிம்புநிலை மக்களின் பாதுகாப்புடன் இணைந்து வளர்ச்சி மீட்டெடுப்பு வேண்டும்" என்றார்.

Advertisment

இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ரகுராம் ராஜன், பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ, டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன், பேராசிரியர் ஜீன் டிரீஸ், முனைவர் அரவிந்த் சுப்பிரமணியன், டாக்டர் எஸ். நாராயண், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

chief minister discussion Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe