தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 29ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன்முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
மருத்துவநிபுணர் குழு உடனானஇந்த ஆலோசனைக்கு முன்னதாக, ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. செப்டம்பர் 30ஆம் தேதியுடன் கரோனாபொதுமுடக்கம்நிறைவடையும் நிலையில், இந்த முக்கியஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பொதுமுடக்கத்தைநீட்டிப்பது மற்றும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படஇருப்பதாக தெரிகிறது.