Published on 04/08/2021 | Edited on 04/08/2021

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (04/08/2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி சந்தித்தார். அதைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனையும் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வீராங்கனையின் தாயார் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, "அடுத்த ஒலிம்பிக் போட்டியில் திறம்பட விளையாட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசு செய்த உதவிகளுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தேன்" என்றார்.