/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pularvar-rasu.jpg)
கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு (வயது 85). இவர் உடல் நலக் குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கலைத்தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ. ராசு வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என அறிந்து வருத்தமுற்றேன். பல கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளைப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய அவரது மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)