Advertisment

கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் நிவாரணம் வழங்க உத்தரவு 

The Chief Minister condoled the victims of the accident and ordered to provide relief

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நமணசமுத்திரம் காவல் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடிக்க வேன்களை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள், ஓம் சக்தி பக்தர்கள், ஒரு குடும்பத்தினர் மீது சிமென்ட் லாரி மோதிய விபத்தில் திருவள்ளூர், சென்னையை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

உயிரிழந்த 5 பேர் குடும்பத்தினருக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.

முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, ஆர்.எம்.ஓ. இந்திராணி ஆகியோர் நிவாரண காசோலையை வழங்கினார்கள்.

puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe