Published on 14/03/2021 | Edited on 14/03/2021

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், தலைவர்கள் சிலைகள் மறைக்கப்பட்டு கொடிக் கம்பங்களும் மறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு காதணி விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் முன்னாள் முதல்வர் ஜெ, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஒபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கர், திருமயம் தொகுதி வேட்பாளர் வைரமுத்து, ரெத்தினசபாபதி எம்எல்ஏ, மற்றும் அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ராஜநாயகம் ஆகியோர் படங்களுடன் பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி சிலர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் புகார் கூறிய நிலையில், படங்களை பதாகையில் இருந்து கிழித்து அகற்றினார்கள் தேர்தல் அதிகாரிகள்.