தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தருமபுரி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். காலை 11 மணி அளவில் பாலக்கோடு தொகுதியில் அமைச்சர் கே.பி அன்பழகனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். 12 மணி அளவில் பென்னாகரத்தில் பாமக தலைவர் ஜி.கே மணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனை தொடர்ந்து இரவு சேலம் செல்லும் அவர், நாளை கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.