/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/GGH_4.jpg)
தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் தற்போதுதொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் கூறுகின்றன.தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பரவி உள்ளது. குறிப்பாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் கரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் தங்கமணி, செல்லூர் ராஜூ, பழனியப்பன் ஆகியோர் பங்கேற்கவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமைச்சர் சி.வி சண்முகம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)