ADVERTISEMENT

சமூக சேவையில் ஆர்வமுள்ள இளைஞரா? முதலமைச்சர் கையால் விருது ரெடி!

10:12 AM Jun 11, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


சமுதாய மேம்பாட்டுக்காக சேவையாற்றிவரும் இளைஞர்கள் முதலமைச்சரின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. 15 முதல் 35 வயது வரையிலான 3 ஆண்கள், 3 பெண்களுக்கு விருது வழங்கப்படும்.

ADVERTISEMENT

இந்த விருதுடன் 50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவையும் வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சரால் நேரடியாக வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆண், பெண்கள் 1.4.2021ஆம் தேதியன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அல்லது 31.3.2021 அன்று 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இந்த விருதுக்கு கடந்த 1.4.2020 முதல் 31.3.2021 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்திருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களும் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

சமுதாய நலன்களுக்காக தொண்டாற்றி இருத்தல் வேண்டும். இந்த விருதுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT