Advertisment

'நேருக்கு நேர்' - பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மற்றும் ஆளுநர்! 

Chief Minister and Governor attending the graduation ceremony!

பல்வேறு சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பனிப்போர் நிலவி வரும் சூழலில் இருவரும் வரும் மே 16- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று நடைபெறவுள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் 164 பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

Advertisment

இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாதநிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் 931 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கவுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் உள்ள 20- க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்யும் சட்டமசோதா உள்ளிட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

students
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe