Skip to main content

பல்வேறு சிறப்பு தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி என். கிருபாகரன் பணி ஓய்வுபெற்றார்...

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

Chief Justice N. kirubhakaran retired

 

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என். கிருபாகரன் இன்று (20.08.2021) ஓய்வுபெறுகிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன், 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி திருவண்ணாமலை, செய்யூர் தாலுகா, நெடும்பிறை கிராமத்தில் பிறந்தவர். சட்டப்படிப்பை முடித்து, 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி வழக்கறிஞராக பதிவுசெய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய நீதிபதி கிருபாகரன், சிவில் வழக்கு மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். மத்திய, மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றிய கிருபாகரன், 2009ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக்கப்பட்டார்.

 

ஆகஸ்ட் 20ஆம் தேதி 62 வயதைப் பூர்த்தி செய்வதையொட்டி இன்று ஓய்வுபெறுகிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. நீதிபதி என். கிருபாகரன் தீர்ப்புகள், உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், நீட் தேர்வு தொடர்பாக அரசியல் கட்சியினர் தமிழ்நாட்டு மாணவர்களை ஏமாற்றக் கூடாது எனவும் உறுதியான நிலையை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். குற்றாலம் நீர்வீழ்ச்சியை சுத்தப்படுத்தும் வகையில் எண்ணெய் குளியலுக்குத் தடை, பாலியல் வன்கொடுமைக்குத் தண்டனையாக ஆண்மை நீக்கம் என பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். வெறுப்பு அரசியலைக் கட்சிகள் கைவிட உத்தரவு, மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

Chief Justice N. kirubhakaran retired

 

அவர் நீதிபதியாக தனது பணியைத் துவங்கியது முதலே பல்வேறு சிக்கலான வழக்குகளில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அவை, “தேர்தல் வாக்குறுதிகளைத் தடை செய்யும் சட்டத்தை இயற்றுவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு, கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தப்படுத்தக் கூடாது, மது போதையில் வாகனம் ஓட்டுவோரைக் கைது செய்ய வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தல், முறையான ஒதுக்கீடு இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்தல், ஹீரோக்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என ‘கபாலி’ பட வழக்கில் உத்தரவு, தொல்லியல் துறையின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை வெளியிட உத்தரவு, டிக் டாக் தடை, இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது, இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பயணிப்பவர் இருவரும் கட்டாயம்  ஹெல்மெட் அணிய உத்தரவு.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் அறிவிப்பு வழக்கு, நீட் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை, நீட் தேர்வில் தோல்வியால் ஏற்பட்ட தற்கொலையைப் புனிதப்படுத்துவதை நிறுத்த அரசியல் கட்சியினருக்கு உத்தரவு, குரு பூஜைகளுக்கான வழிகாட்டுதல்கள், சதுப்பு நிலத்தின் பாதுகாப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பு இடஒதுக்கீடு, வேகக் கட்டுபாட்டுக் கருவிகளை வாகனங்களில் பொருத்த உத்தரவு, வழக்குகளின் தேக்கத்தைக் கருத்தில்கொண்டு சென்னையில் 4 குடும்ப நீதிமன்றங்களை அமைக்க உத்தரவு, வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி, சட்ட அதிகாரி நியமனத்தில் அரசியல் தலையீடு கூடாது,  பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்க உத்தரவு, மதுரையில் உயர் நீதிமன்ற பெஞ்சிற்கு எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவது, எச்ஐவி பாசிட்டிவ் ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை,  வீடு, இருசக்கர வாகனம், இழப்பீடு வழங்குதல்.

 

sdgds

 

திருமணம் செய்ததற்காக கல்லூரி மாணவனை வெளியேற்ற முடியாது, சென்னை மாநகராட்சி சொத்து வரியை 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்துவதற்கான வழிகாட்டுதல், மொழியியல் பேரினவாதம் தொடர்பான உத்தரவு, புதிய சாலைகளை அமைப்பதற்கு முன் பழைய சாலையைத் தோண்டி எடுத்தல், ஜப்தி செய்யப்பட்ட 1,500 பேருந்துகளை வெளியிட்டது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பரிந்துரை, பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் உடலைப் பிரேதப் பரிசோதனை வழக்கு, மெட்ராஸ் சட்டக் கல்லூரிகளின் இடமாற்றம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் 109 உதவி பேராசிரியர்கள் நியமனம், கரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சனை, உள் காயங்களையும் இஎஸ்ஐ சட்டத்தில் சேர்க்க வழிகாட்டுதல், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட 144 மருத்துவ மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க உத்தரவு, பி.எஸ்.எம்.எஸ்.  படிப்பில் திருநங்கையைச் சேர்க்க உத்தரவு” இவ்வாறான பல வழக்குகளில் அதிரடியான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆடையை கழட்டுமா...” - நீதி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A case of judge for A woman who went to court seeking justice in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், கரெவுளி மாவட்டத்தில் உள்ள ஹிண்டாவுன் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சில மர்ம கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தின் நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அப்போது, நீதிபதி காயங்களை காட்டுவதற்காக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றும்படி கூறியதாக கூறப்படுகிறது. 

இதில் அதிர்ச்சியடைந்த பெண், இது தொடர்பாக நீதிபதி மீது போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘என் வாக்குமூலத்தைப் பெற நீதிபதி என்னை அழைத்திருந்தார். அதன்படி, நான் நீதிமன்றத்திற்கு சென்று முழு அறிக்கையை கொடுத்தேன். அதன் பிறகு, நான் வெளியே வர ஆரம்பித்தேன். அப்போது, நீதிபதி என்னை மீண்டும் திரும்ப அழைத்தார். அப்போது, அவர் என் ஆடைகளை கழற்றச் சொன்னார். அதற்கு நான், ஏன் என் ஆடைகளை கழற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், என் உடலில் உள்ள காயங்களை பார்க்க விரும்புவதாக கூறினார். உங்க முன்னாடி என்னால துணியை திறக்க முடியாது என்று கூறி, மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹிண்டாவுன் நகர போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று (03-04-24) வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை ஆடைகளை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அங்கித் திவாரி வழக்கு; நீதிபதி கோபம்! 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ankit Tiwari case; The judge is angry

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டது.

அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் மார்ச் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வைத்துள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது” என கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட  நீதிபதி, மார்ச் 12 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதார் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.