Advertisment

சமூக நீதிக் கண்காணிப்புக்குழு தலைவர், உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Chief Justice MK Stalin orders Social Justice Monitoring Committee Chairman and members

சமூக நீதிக் கண்காணிப்புக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisment

அதன்படி, சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக பேராசிரியர் சுப.வீரபாண்டியனும், உறுப்பினர்களாக முனைவர் கே.தனபால் இ.ஆ.ப. (ஓய்வு) ,பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், பேராசிரியர் முனைவர் ஆர்.ராஜேந்திரன், கோ.கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவானது, சமூக நீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா, என்பதைக் கண்காணித்து, அவை முழுமையாகப் பின்பற்றப்படாவிட்டால், உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கு அவ்வப்போது தமது பரிந்துரைகளை வழங்கும். இக்குழுவில் சமூகச் சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர், உறுப்பினர், செயலராக அங்கம் வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chief minister order Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe