Advertisment

The chief engineer who inspected Veeranam Lake

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளக்கி வருவது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இதன் மூலம் 44 ஆயிரித்து 586 ஏக்கர் விளைநிலம் பாசம் பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு தொடர்ந்து குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ஏரிக்கு நீர் வரத்து இல்லாதாதலும், கடும் வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் சரிந்தது. இதனை தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கீழணையில் இருந்து மேட்டூரில் இருந்து தண்ணீரை வடவாறு வழியாக தொடர்ந்து அனுப்பி வைத்தனர்.இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் ஏரி நிரம்பி முழு கொள்ளளவான 47.50 அடியை ஏட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.ஏரி நிரம்பியதால் சிதம்பரம் நீர் வளத்துறை அதிகாரிகள், நீர் வளத்துறை பணியாளர்கள் கொண்டு குழு தொடர்ந்து ஏரியின் கரைகளை கண்காணித்து வந்தது.

Advertisment

இந்த நிலையில், இன்று (07-06-25) மாலை நீர்வளத்துறையின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜானகி வீராணம் ஏரியை ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ஏரியின் ஷெட்டர்கள், வடிகால் மதகுகள், பாசன மதகுகள் அகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர்,ராதா மதகு பகுதியில்ஏரியை பார்வையிட்டார். பின்னர் அவர், ஏரியின் கரையை தொடந்து கண்காணித்து வர வேண்டும் என்று நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.இவருடன் சிதம்பரம் நீர் வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள், விஜயகுமார், கொளஞ்சிநாதன், ரமேஷ் வீராணம் ஏரி உதவி பொறியாளர் சிவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.