தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல்களின்ஏற்பாடுகள் தொடர்பாகவும், அக்டோபர் 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாகவும் சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு ஆலோசனை இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.