Advertisment

சிதம்பரம் அருகே வாய்க்காலில் குளிக்கச் சென்ற சிறுமி சடலமாக மீட்பு!

Chidhambaram girl child river incident

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் உள்ளவெங்கட்டான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் குடும்பத்துடன் சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் உள்ள சாலையில் தங்கிக்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் பணியைச் செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை பணிக்குச் சென்றபோது அவரது மகள் அழகம்மாள் (15) மற்றும் இவரது தங்கை, தம்பியுடன் அருகில் இருந்த பாசிமுத்தான் ஓடை வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

Advertisment

அப்போது அழகம்மாள், வாய்க்கால் படிதுறையில் இருந்து தவறி விழுந்து நீரின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.இதனை அவரது தம்பி மற்றும் தங்கை பார்த்து அலறி துடித்தபோது பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அவர் மறைந்துவிட்டார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர், மற்றும் வருவாய்த் துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்தில் சிறுமியின் உடலை வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை தேடினார்கள். இரவு நேரத்தில் தேட முடியாத சூழலில் சனிக்கிழமை காலை உடலை தேடியபோது வாய்க்காலின் ஷட்டர் அருகே சிறுமியின் உடல் ஒதுங்கி இருந்தது தெரியவந்தது. உடலைக் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe