Skip to main content

சிதம்பரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் திறப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதி திறந்து வைத்தார்

Published on 03/02/2019 | Edited on 03/02/2019

 

  

c

 

 சிதம்பரம் அருகே சி.முட்லூரில் கட்டப்பட்டுள்ள சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்புகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் ,ஜெயச்சந்திரன், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைதுறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி  ஞாயிறன்று திறந்து வைத்தார்.

 

இதனைதொடர்ந்து நீதிமன்ற திறப்பு நிகழ்ச்சிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடந்தது.    இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி பேசியதாவது:  கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரில் நடராஜர் திருக்கோயில்கள் போல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் உள்ளன. சிதம்பரம் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் சுமார் ரூ.24.16 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

 

கடலூர் மாவட்ட நீதிமன்றம் 150 ஆண்டுகாலமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கான விழாவினை சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்படும். சிதம்பரத்தில் சார்பு நீதிமன்றம் ஒன்று உள்ளது. மேலும் கூடுலாக ஒரு சார்பு நீதிமன்றம் அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.புதிதாக அமைக்கப்படவுள்ள நீதிமன்றங்களில் சி.சி.டி.வி கேமரா, பாதுகாப்பு உபகரணங்கள் அமைய உள்ளன. நீதிமன்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு உடனடியாக நீதி வழங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு புதிய நீதிமன்றகளையும், நீதிமன்ற கட்டிடங்களையும் மற்றும் நீதிமன்றங்களுக்கான பிற வசதிகளையும் அரசு ஏற்படுத்தி கொடுப்பதின் நோக்கம் பொதுமக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் என்று பேசினார்.

 

 சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  பேசுகையில்,  அரசு 2011 முதல் கடந்த 7 வருடங்களில் 41 இடங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.527.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது.

நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும் தேவையான அனைத்து இடங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் . இதனை தொடர்ந்து தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத் பேசினார்.

 

c

 

முன்னதாக பொதுப்பணித்துறையின் மேற்பார்வை பொறியாளர் ராஜவேல் திட்ட அறிக்கை வாசித்தார்.  முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி  கல்வெட்டினை திறந்து வைத்தார்.  இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி வரவேற்று பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன்,சிதம்பரம் எம்பி சந்திரகாசி, பாண்டியன் எம்எல்ஏ, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுந்தரம்,சிதம்பரம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் கோபாலகிருஷ்ணன்,சிதம்பரம் பார் அசோசியேஷன் தலைவர் கிரி, பொதுப்பணித்துறை கடலூர் செயற்பொறியாளர் தனபால், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிடட வழக்கறிஞர்கள், நீதிதிகள், நீதி மன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Release of special election report

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டிணம் என்ற இடத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், “வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். டாகர்.அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது. மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்கப்படும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக் கூடாது.

ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆனைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் பொது மக்களும் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.