Advertisment

பாதாளசாக்கடை பணிகள் முடிந்த தெருக்களில் சாலைகள் விரைவில் போடப்படும்- பாண்டியன் எம்எல்ஏ

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்த தெருக்களில் சாலைகள் போட தாமதம் ஏற்படுவதால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் இந்த பணியால் சில தெருக்களில் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Advertisment

jj

இந்தநிலையில் சிதம்பரம் நகராட்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, பொறியாளர் மகாதேவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள். சாலைகள் போட ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் பணிகள் முடிந்த தெருக்களில் விரைவில் தார் சாலை போட வேண்டும். சாலைபணிகளை தாமதபடுத்தும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீரில் சாக்கடை கலந்து வரும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் நகரத்திற்கு வகார மாறி ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளது. வீராணத்திலிருந்து குடிநீர் எடுத்து வர திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று பேசினார்.

அப்போது சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை கதவுகள் இல்லை. சுற்றுப்புற சுவர் இல்லை இதனால் மாணவிகள் பில்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக செய்தியாளர்கள் சட்ட மன்ற உறுப்பினரிடம் சுட்டிகாட்டினர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கழிவறையில் கதவுகள் இல்லாததை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக நான்கு கதவுகள் போடுவதற்கு உத்தரவிட்டார். மேலும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்து விரைவில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

school
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe