சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்காக கூட்டணி கட்சி்யினர் இறுதிகட்ட பிரச்சாரம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானைச்சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

v

இந்நிலையில் செவ்வாய் மாலையுடன் பிரச்சாரம் முடியும் நிலையில் சிதம்பரம் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் கூட்டணி கட்சியினர்கள் இருசக்கர வாகன பேரணி மூலம் சிதம்பரம் நகரத்திலுள்ள 33 வார்டுகள், அண்ணாமலைநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பேரணியை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜான்சிராணி, மூசா கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

v

கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு முத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி வன்னியரசு, பாலஜி, மாவட்ட செய்தி தொடர்பாளர் திருவரசு உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் கலந்துகொண்டு பானைச்சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்.

chidambaram vck thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe