சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்ட நிலையில் ரூ.18.39 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லைக் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள 5 உண்டியல்களும் நேற்று பிரித்து எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட உதவி ஆணையர் பரணிதரன், தில்லைக் காளியம்மன் கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், கோயில் ஆய்வாளர் நரசிங்கபெருமாள், அலுவலர் வாசு உள்ளிட்டோர் முன்னிலையில் உண்டியல் பிரித்து பணம் எண்ணப்பட்டது. இதில் 18 லட்சத்து 39 ஆயிரத்து 945 ரூபாய் ரொக்கப் பணம் கிடைத்தது. மேலும் 61 கிராம் தங்கமும், 225 கிராம் வெள்ளியும் கிடைத்தது. 2 அமெரிக்க டாலர்களையும், 10 சிங்கப்பூர் டாலரையும் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.