Advertisment

சிதம்பரம் கோயில்- கருத்து கேட்கும் விசாரணை குழு! 

Chidambaram Temple - Inquiry Committee!

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த கருத்துகள், ஆலோசனைகள் வழங்க அக்கறை உள்ள நபர்கள் ஆலோசனை வழங்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக, நாளிதழ்களில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23 மற்றும் 33- ன் படி ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிடம், திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் (Persons having interest as per Section 6(15)) தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வருகின்ற 20/06/2022 மற்றும் 21/06/2022 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை துணை ஆணையர்/ ஒருங்கிணைப்பாளர், விசாரணைக் குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண்.8 ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர்- 607001 என்ற முகவரியில் நேரில் அளிக்கலாம். அஞ்சல் மற்றும் vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 21/06/2022 மாலை 03.00 மணிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Chidambaram temple
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe