சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா (51) ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

chidambaram temple dikshidar issues police investigation

இவரது மகன் ராஜேஷ்(21) பிறந்த நாளான சனிக்கிழமை (16/11/2019) மாலை அர்ச்சனை செய்வதற்காக சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்திலுள்ள முக்குருணி விநாயகர் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவிலில் இருந்த தீட்சிதர் தர்ஷனிடம் பூஜை சாமான்களை கொடுத்துவிட்டு மகன் பெயரை கூறுவதற்குள் தீட்சிதர் உள்ளே சென்று அர்ச்சனை செய்துவிட்டு வந்துவிட்டார். அப்போது அந்தப் பெண் நான் நட்சத்திரம், ராசி, மகன் பெயர் எதையுமே கூறாதபோது தாங்கள் எப்படி போய் அர்ச்சனை செய்தீர்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு லதாவை தகாத வார்த்தைகளால் திட்டிய தீட்சிதர் கன்னத்தில் அறைந்ததால் கோயில் வளாகத்தில் மயங்கி கீழே விழுந்த, அவர் சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

chidambaram temple dikshidar issues police investigation

Advertisment

புகாரின் பேரில் பெண்ணைத் தாக்கிய தீட்சிதர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லதா என்பவரை தாக்கிய தீட்சிதர் தர்ஷன் மீது பெண் வன்கொடுமை தடை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தர்ஷனை போலீசார் தேடி வருகின்றனர்.