தீட்சிதர்கள் குடும்பத்திற்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? - பக்தர்கள் எதிர்ப்பு! 

In chidambaram temple devotees are struggle to get inside

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 19ஆம் தேதி ஆருத்ரா தேர் திருவிழா, 20ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சிவபக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆண்டுக்கு இருமுறை ஆணி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா என நடைபெறும் இந்த திருவிழா காலங்களில் கோவிலில் திருவிழா விமர்சையாக இருக்கும். இதனை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழாவிற்காக இன்று (11.12.2021) கொடி ஏற்றும் நிகழ்ச்சி கோவில் கருவறை முன் உள்ள கொடி மரத்தில் நடைபெற்றது. இதில் தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். கரோனா கட்டுப்பாடு உள்ளதால் கோவிலுக்கு உள்ளே பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சார்பில் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

In chidambaram temple devotees are struggle to get inside

இதனைத் தொடர்ந்து டிச 11ஆம் தேதி சனிக்கிழமை (இன்று) அதிகாலை முதல் பக்தர்களைக் கோவிலுக்கு உள்ளே விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.ஆனால் இதற்கு மாறாக, நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்குள் சென்ற வண்ணம் இருந்தனர். இதனைப் பார்த்த வெளியில் நின்றிருந்த பக்தர்கள், தீட்சிதர் குடும்பத்திற்கு ஒரு சட்டம்? பக்தர்களுக்கு ஒரு சட்டமா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் காவல்துறையினர் தீட்சிதர் குடும்பத்தைக் கோவிலுக்கு உள்ளே செல்வதைத் தடுக்க முடியாத நிலையில் வெளியில் நின்றிருந்த பக்தர்களையும் வேறு வழியின்றி உள்ளே அனுப்பினர்.

இதுவரை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கோவிலின் உள்ளே பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதேபோல் பொதுமக்களுக்கும், பக்கதர்களுக்கு ஆருத்ரா தரிசன விழாவிற்கு அனுமதி உள்ளதா? இல்லையா? என சரியான விபரம் இல்லை என பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி கோவிலுக்கு உள்ளே யார் பொதுமக்களை அனுமதித்தது என மாவட்ட நிர்வாகம் மற்றும் தனிப்படையினர் கோவில் விசாரணையில் ஈடுபட்டனர்.

chidambaram temple Devotees
இதையும் படியுங்கள்
Subscribe