Advertisment

சிதம்பரம் பகுதிகளில் கந்துவட்டி கொடுமையால் வாலிபர்கள் தற்கொலை

ரகத

காட்டுமன்னார்குடி ரம்ஜான் தைக்கால்பகுதியைச் சேர்ந்த கவியரசன் முடிதிருத்தும் தொழிலாளி. இவர் மேட்டு தைக்கால் பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் காட்டுமன்னார்குடி வட்டம் மோவூர் பகுதியைச் சார்ந்த சசி குமார் என்பவர் கந்துவட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். கவியரசன் பணம் கொடுக்க தாமதமானதால் அவரிடம் மீட்டர் வட்டி, பத்து பைசா வட்டி என பல லட்சங்களைவட்டியாக சசிகுமார்வாங்கியுள்ளார். இந்நிலையில் வட்டிக்கு வாங்கிய கவியரசனை இன்னும் அசல் மற்றும் வட்டிக் கொடுக்க வேண்டுமெனக் கூறி சசிக்குமார் மிரட்டி அருவருக்கத்தக்க வகையில் திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் சசிகுமாருக்கு பயந்து கவியரசன் தன்னுடைய முடிதிருத்தும் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டசெயலர் தேன்மொழி, மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், குமராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் புஷ்பராஜ், மூர்த்தி, சலவைத் தொழிலாளர் சங்க தலைவர் மாரியப்பன், சிபிஎம் காட்டுமன்னார்குடி வட்டக் குழு உறுப்பினர்கள் புகழேந்தி, பொன்னம்பலம், உள்ளிட்ட உறவினர்கள்அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அதேபோல் சிதம்பரம் அருகே ஆதிவராக நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளஞ்சூரியன். இவரிடம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன், அசோக், சௌந்தர்ராஜன் ஆகியோர் 5 லட்சம் ரூபயைகந்துவட்டிக்குகொடுத்து உள்ளனர். இவர் இதுவரை வட்டியாக 18 லட்சம் கொடுத்துள்ளதாகவும் சரியான நேரத்தில் வட்டிக் கொடுக்காததால் இளஞ்சூரியன் வீட்டிலிருந்த ஆம்னி வேன், என்ஃபீல்ட் இருசக்கர வாகனம், மினி சரக்கு வண்டி ஆகியவற்றை கந்துவட்டி கும்பல்கட்டப்பஞ்சாயத்து செய்து பறிமுதல் செய்துள்ளது.மேலும் இவருடன் அசல் பணத்தை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதற்கு பயந்து கடந்த 2ஆம் தேதி இவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது இவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி 6-ஆம் தேதி உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட கந்துவட்டி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் 7-ஆம் தேதி இரவு சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகி வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kanthuvatti Teenagers Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe