Advertisment

'சிதம்பர ரகசியம் பார்ட் 2' நாளை வெளியிடப்படும்... போஸ்டரால் பரபரக்கும் சிதம்பரம்!

'Chidambaram Secret Part 2' to be released tomorrow ... Poster stirs in Chidambaram ..!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 48 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

அரசு மருத்துவக் கல்லூரியில், அரசு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி நாள்தோறும் பல்வேறு நூதனப் போராட்டங்களை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியத் தலைநகரங்களில் ஒட்டப்பட்ட ‘சிதம்பர ரகசியம் பார்ட் 2’ என்ற சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

குடியரசுத் தினமான நாளை (26-ந்தேதி) சிதம்பர ரகசியம் பார்ட் 2 வெளியிடப்போவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இடமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வளாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் நடத்திய மூன்று கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், நேற்று இரவு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்துள்ள ஊழல், முறைகேடு பட்டியல் வெளிவரலாம் எனத் தகவல் பரவி வருவதால் பல்கலைக்கழக வளாகம் மட்டுமின்றி சிதம்பரம் நகரமே பரபரப்பில் உள்ளது.

medical college Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe